பசளை மற்றும் கிருமிநாசினி பற்றாக்குறை: கமநல சேவை மையங்கள் எடுத்துள்ள தீர்மானம்
பசளை மற்றும் கிருமிநாசினி இத்தேவையை உடனடியாக பூர்த்திசெய்யுமாறு கோரி வடக்கு கிழக்கிலுள்ள சகல கமநல சேவைகள் மையங்கள் ஊடாக ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஆ.சுமந்திரன்(M.A.Sumanthiran) இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
"நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள உரம் மற்றும் கிருமிநாசினி பற்றாக்குறை விவசாயிகளையும் தோட்டத்தொழிலையும் மிக மோசமாகப் பாதித்திருக்கிறது.
வடக்கிலும் கிழக்கிலும் காலபோக /பெரும்போக நெற் பயிர்ச்செய்கை தற்போது ஆரம்பமாகியுள்ளது. ஓரிரு வாரங்களுக்குள் பசளை மற்றும் கிருமி நாசினி அத்தியாவசியமாகத் தேவைப்படும்.
இத்தேவையை உடனடியாக பூர்த்திசெய்யுமாறு கோரி வடக்கு கிழக்கிலுள்ள சகல கமநல சேவைகள் மையங்களுக்கூடாக 18ம் திகதி திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன.
கோவிட் தொற்று
காரணமாகச் சிறிய எண்ணிக்கையானவர்கள், சமூக இடைவெளிகளைப்
பேணி இப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள். பல இடங்களில் ஓரே நேரத்தில்
நடைபெறவிருக்கும் இவ்வார்ப்பாட்டங்களுக்கு அனைவரும் ஆதரவு அளிக்க
வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri