பெண்ணியத்தின் ஆளுமை கௌரி சங்கரி தவராசா! ஶ்ரீநேசன் இரங்கல்
சிரேஷ்ட சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான திருமதி. கௌரி சங்கரி தவராசா திடீர் உடல்நலக் குறைவால் இன்றையதினம் இயற்கை எய்தினார்.
இவர் தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான K.V. தவராசாவின் மனைவியான இவர் குற்றவியல் வழக்கறிஞராக செயற்பட்டு வந்தார்.
இந்நிலையில், அவரின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றதுடன்,மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் தமது இரங்கல்களை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறப்பான சட்டத்தரணி சிந்தனையாற்றல் மிக்கவர். விறைப்பான பல வழக்குகளில் வெற்றிகள் பலபெற்றவர். பெண்ணியத்தின் ஆளுமையவர்.பெருமை தமிழர்க்கு சேர்த்தவர்.கண்ணியப்பணிகள் செய்தவர். காத்திரமான சட்டவியலாளர்.குற்றவியல் வழக்குகள் கணவருக்கும்.குடியியல் வழக்குகள் தனக்கென்று குடும்பமாய்த்தமிழர்க்கு உழைத்தவர்கள். பயங்கர காலகட்டத்தில் பயமின்றி.பணிகள் பலவும் செய்தவர் கொரோனாவென்னும் கொடுவைரஸ்.கொடுக்கவில்லையவருக்குப் பணிநீள. ஆழ்ந்த அஞ்சலிகள் அன்னாருக்கு.ஜனாதிபதி சட்டத்தரணியார் கணவர்
சாருறவினர்கள் உற்றாரனைவருக்கும் உளவுறுதிபெற்றிடப் பிரார்த்திக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
