திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த பெண் இராணுவ சிப்பாய் படுகாயம் : வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணம், வடமராட்சி, பருத்தித்துறை - கற்கோவளம் இராணுவ முகாமில் திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த பெண் சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (17.07.2023) இடம்பெற்றுள்ளது.
திருத்த வேலையின் போது இரும்புக் கம்பி தலையில் விழுந்ததில் அவர்
படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளானவர் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் மகியங்கணைப் பகுதியை சேர்ந்த டபிள்யூ. எம் .எஸ் .எம். விஜயசிங்க (26) என்ற பெண் சிப்பாய் ஆவார்.
வைத்தியசாலையில் அனுமதி
மேலும், இவர் கற்கோவளம் இராணுவ முகாமில் நேற்று (17.07.2023) நண்பகல் திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த போது கட்டடத்தில்
இருந்த இரும்பு கம்பி அவரின் தலை மீது விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து படுகாயங்களுக்கு உள்ளானவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி அணையா விளக்கு போராட்டம் சொல்லும் செய்தி என்ன..! 17 மணி நேரம் முன்

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

இஸ்ரேலை விட்டு வெளியேறும் யூதர்கள்.. வெளியே கூறமுடியாத இஸ்ரேலின் மிகப் பெரிய இராணுவ இழப்பு News Lankasri
