இந்தியாவிலிருந்து விண்வெளிக்குச் செல்லவுள்ள பெண் ரோபோ
இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்காக இந்தியா பெண் ரோபோவான 'வியோமித்ரா' அனுப்பப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று(26.08.2023)தெரிவித்துள்ளார்.
அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் ஒரு சோதனை விண்வெளிப் பயணம் முயற்சி செய்யப்படும்.
இதன் பின்னர் இரண்டாவது முயற்சியில் பெண் ரோபோ 'வியோமித்ரா' விண்வெளிக்கு அனுப்பப்படும் என்று இந்திய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் கூறியுள்ளார்.
சோதனைப் பயணம்
கோவிட் தொற்றுநோய் காரணமாக ககன்யான் திட்டம் தாமதமானது.
மேலும், அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் முதல் சோதனைப் பயணம் திட்டமிடப்படுகிறது.
விண்வெளி வீரர்களை அனுப்புவது போலவே அவர்களைத் திரும்பக் கொண்டுவருவதும் முக்கியமாகும் என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
இதற்காகவே பெண் ரோபாவான வியோமித்ரா அனுப்பப்படுவதாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
