போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புடைய பெண் பொலிஸ் அதிகாரி கைது!
பதுளை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(26.1.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த நோனக்கா என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் உவபரணகம பிரதேச செயலகப் பிரிவில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை
அம்பகஸ்டோவ பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நீண்ட காலமாக உவபரணகம பிரதேச செயலகப் பிரிவுக்கு ஹெரோயின் விற்பனை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, பெண் பொலிஸ் அதிகாரியிடமிருந்து 4.200 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் அம்பகஸ்டோவ பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர், போதைப்பொருள் விற்பனையிலிருந்து கிடைத்த பணத்தை பதுளை தனியார் வங்கியில் (சம்பத் வங்கி) உள்ள தனது தாயாரின் கணக்கில் வைப்பு செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விசாரணையின் போது, பதுளையில் உள்ள நோனக்கா என்ற பெரிய அளவிலான ஹெரோயின் வியாபாரியிடமிருந்து ஹெரோயின் வாங்கி தனது முகவர்கள் மூலம் விநியோகித்ததாகவும், அந்தப் பணம் அவரது தாயாரின் வங்கிக் கணக்கில் வைப்பு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கைது
அவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹெரோயின் விநியோகித்த நோனக்காவுடன் இரண்டு பெண்களும் ஒரு ஆணும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் விசாரணைக்காக பொலிஸ் அதிகாரியையும் நோனக்கா என்ற சந்தேக நபரையும் தடுத்து வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அம்பகஸ்டோவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 4 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri