கருணாவால் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்ட பெண் தளபதிகள் கூறிய அதிர்ச்சித் தகவல்கள்..!
2004ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதியாகவிருந்த கருணாவுடன் கொழும்பிற்கு சென்று திரும்பிய பெண் தளபதிகள் பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
யுத்த பரபரப்பான அந்த காலத்தில் அவர்கள் வெளிப்படுத்திய தகவல்கள் சரியான முறையில் மக்களின் கவனத்தை பெரிதாக ஈர்த்திருக்கவில்லை என்பதுடன் சரியான முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட தளபதியாக கடமையாற்றிய சாளி என்றழைக்கப்பட்ட நிலாவினி,மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மகளீர் அரசியல்துறை பொறுப்பாளர் பிரேமினி, மற்றும் மகளிர் படையணிகளின் தளபதிகளான லாவண்யா - தீந்தமிழ் போன்றவர்களே கருணா தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்கள்.
கருணாவின் திடீர் முடிவிற்கும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டபோராளிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை, அச்சம் காரணமாக கருணாவுடன் விருப்பமின்றி செயற்பட வேண்டிய கட்டாய நிலைக்கு செல்லப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.
இலங்கை இராணுவ பிரிவினருடன் இணைந்து செயற்பட போவதாக கருணா குறித்த போராளிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.
தனியான கொழும்பில் ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்த இவர்களுக்கு கருணாவின் மனைவியே கட்டளை பிறப்பித்துள்ளார்.
குறித்த போராளிகளின் கையடக்க தொலைபேசிகளையும் பறித்துள்ளனர். புலனாய்வு பிரிவினரின் கண்காணிப்பிலேயே இருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், பெண் தளபதிகள் கூறிய அதிர்ச்சிகரமான விடயங்களை சுமந்து வருகின்றது உண்மைகள் நிகழ்ச்சி...
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்து வந்த இரகசியம் - நீலனின் அவசர கடிதம்! தலைமை எடுத்த முடிவு..
தொடரும் கபில சந்திரசேனவின் மரண விசாரணை..! அரவிந்த டி சில்வாவின் மனைவி மூலம் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள் News Lankasri
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan