கொழும்பு வைத்தியசாலையில் பெண் வைத்தியர் மீது கத்திக் குத்து
கொழும்பு சொய்சா வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் வைத்தியர் ஒருவர் கணவரால் கத்தியால் வெட்டப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த வைத்தியர் ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியரை கத்தியால் வெட்டி காயப்படுத்திய கணவர் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் என அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரது முதுகு மற்றும் கைகளில் மருத்துவர் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வைத்தியரின் கையடக்கத் தொலைபேசியில் உள்ள தொலைபேசி இலக்கம் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறிச் சென்றதையடுத்து கணவர் இதனைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri