இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு - வர்த்தக பிரதிநிதி குழுவினர் இலங்கை விஜயம்
இந்தியாவின் முன்னணி ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்பான இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (Federation of Indian Export Organisations - FIEO) தலைமையிலான 31 உறுப்பினர்களைக் கொண்ட வர்த்தக பிரதிநிதிகள் குழுவுடன் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இந்த விஜயம், 2026 ஜூலை 8 முதல் 10 வரை மேற்கொள்ளப்படும் என்றும், இந்தியா - இலங்கை இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் வணிகக் கூட்டாண்மைகளை மேம்படுத்தும் புதிய வாய்ப்புகள் ஆராயப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பிரதிநிதிகள் குழுவில் மருந்துத் தயாரிப்பு, பொறியியல் உற்பத்திகள், ஆடை மற்றும் நெசவுத் துறை, உணவு மற்றும் விவசாயப் பொருட்கள், உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்றுள்ளளனர்.
முக்கிய தீர்மானங்கள்
இதனைத் தொடர்ந்து, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பிரதிநிதிகள் குழு சந்தித்து கலந்துரையாடி, இலங்கையின் வளர்ந்து வரும் பொருளாதாரம், இந்தியா - இலங்கை பொருளாதார ஒத்துழைப்பின் விரிவடைந்துவரும் நிலை மற்றும் இருதரப்பு வர்த்தகம், முதலீட்டை மேலும் விரிவுபடுத்துவதற்கான பரந்த வாய்ப்புகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் குழுவிற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

மேலும், உணவுப் பொருட்கள் மற்றும் விவசாயத் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள், இலங்கையின் வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் துறைசார் விடயங்கள் மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
அதன் பின்னர், பிரதிநிதிகள் குழு இந்தோ - இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சபை (ILCCI), Access Group நிறுவன பிரதிநிதிகள் மற்றும் GOPIO ஒருங்கிணைத்த பல்வேறு சந்தைச் சங்கங்களின் உறுப்பினர்களுடன் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில், புதிய வர்த்தக வாய்ப்புகளை ஆராய்ந்து, வணிகத் தொடர்புகளை ஏற்படுத்தி, இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்தும் வழிகள் ஆகிய விடயங்களில் விவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

இருதரப்பு வர்த்தகத்தையும், வணிக நிறுவனங்களுக்கு இடையிலான (B2B) தொடர்புகளையும் மேம்படுத்தும் தனது தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய உயர்ஸ்தானிகராலயம் 2026 ஜூலை 9ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் "இந்தியா–இலங்கை வர்த்தக இணைப்பு: FIEO பிரதிநிதிகள் குழுவுடனான கலந்துரையாடல்" என்ற நிகழ்வை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், இந்திய வர்த்தக பிரதிநிதிகள் குழுவினருடன், இலங்கையின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் முக்கிய வணிக அமைப்புகளான Indian CEO Forum (ICF), National Chamber of Exporters of Sri Lanka (NCE), Indo-Lanka Chamber of Commerce and Industry (ILCCI) மற்றும் Ceylon Chamber of Young Lankan Entrepreneurs (COYLE) ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

புதிய வணிகக் கூட்டாண்மைகளை உருவாக்கவும், இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்தவும் பயனுள்ள B2B கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது உயர்ஸ்தானிகர் கருத்து தெரிவிக்கையில், உயர்ஸ்தானிகர் இந்தியா - இலங்கை பொருளாதார ஒத்துழைப்பின் விரிவடைந்துவரும் நிலையை எடுத்துரைத்தார்.
இந்தியா தொடர்ந்து இலங்கையின் முக்கிய வர்த்தகப் பங்காளி, மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டு ஆதாரம் மற்றும் இலங்கைக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாடாக இருப்பதை அவர் குறிப்பிட்டார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9