புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தால் ஜீ.எஸ்.பி வரிச்சலுகை இல்லாமல் போகும் அச்சம்: எம்.ஏ.சுமந்திரன்

M. A. Sumanthiran Sri Lanka Politician Sri Lanka Government Of Sri Lanka Sri Lanka Government
By Theepan Apr 09, 2023 04:14 AM GMT
Report

சர்வதேச சமூகத்திற்குக் கொடுத்த வாக்குறுதியை மீறி புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவர முயற்சித்தால் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை இல்லாமல் போகும் என்ற அச்சம் அரசிற்கு ஏற்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (08.04.2023) வடமராட்சியில் 'புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்' குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது, பாரிய பொருளாதாரச் சிக்கல் ஒன்று இந்த நாட்டை பீடித்திருக்கின்றது. அதிலிருந்து இந்த நாட்டை மீட்கப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறி வருகின்றார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தால் ஜீ.எஸ்.பி வரிச்சலுகை இல்லாமல் போகும் அச்சம்: எம்.ஏ.சுமந்திரன் | Fears Of No Gsp Tax Exemption

வாக்குறுதியை மீறுகிறதாக அமையும்

அவ்வாறு நாடு மீண்டதாக ஒரு மாயத் தோற்றம் ஏற்படுத்தப்படுகின்றது. ஆனால், மிக விரைவிலே நாடு மிக மோசமான பொருளாதார சூழ்நிலைக்குச் செல்ல இருக்கிறது. அப்படியான வேளையிலே திரும்பவும் மக்கள் போராட்டங்கள் ஏற்படக் கூடும் என்ற காரணத்தினால் அதை கட்டுப்படுத்தற்கு இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றனர்.

ஏனெனில், கடந்த காலங்கள் போன்று மீண்டும் மக்கள் போராட்டங்கள் ஏற்படுகிற பொழுது அதனைக் கட்டுப்படுத்த அல்லது ஒடுக்குவதற்கு தற்போது ஜனாதிபதியின் கையில் இருக்கின்ற சட்டங்கள் போதாது என்று அவர் கருதுகின்றார்.

அதேபோன்று பயங்கரவாத தடை சட்டங்களைப் பிரயோகித்தால் சர்வதேச சமூகத்திற்குக் கொடுத்த வாக்குறுதியை மீறுகிறதாக அமையும் என்பதாலே ஐரோப்பிய ஒன்றியத்தினால் கொடுக்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி. வரிச் சலுகை கூட இல்லாமல் போகின்ற நிலைமை ஏற்படும்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தால் ஜீ.எஸ்.பி வரிச்சலுகை இல்லாமல் போகும் அச்சம்: எம்.ஏ.சுமந்திரன் | Fears Of No Gsp Tax Exemption

உண்மையான நோக்கம்

ஆகவே, புதியதொரு நல்ல விடயத்தை தாங்கள் செய்வது போல மிக மிக மோசமான ஒரு செயலையே செய்வதற்கு முனைகின்றனர். குறிப்பாகப் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாகக் காட்டிக் கொண்டு அதனை விட மோசமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமென்ற இந்தச் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கின்றனர்.

அதாவது, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குகிறேன் என்று ஒரு மாயத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டும் சர்வதேச நியமங்களுக்கு அமையவே புதிய சட்டத்தையே கொண்டு வருகிறேன் என்பதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.

இந்த சட்டம் கொண்டு வரப்படுவதற்கான உண்மையான நோக்கம் என்னவெனில் மக்கள் ஜனாதிபதிக்கு எதிராக அல்லது அரசுக்கு எதிராகவோ தமது எதிர்ப்பை காண்பிக்கின்ற போது அதனை இரும்புக் கரம் கொண்டு அடக்குவதற்கான ஒரு கருவியாகத்தான் அல்லது முன்னெச்சரிக்கையாகத் தான் முன்கூட்டியே இந்த சட்டத்தைக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் முனைந்திருக்கின்றது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தால் ஜீ.எஸ்.பி வரிச்சலுகை இல்லாமல் போகும் அச்சம்: எம்.ஏ.சுமந்திரன் | Fears Of No Gsp Tax Exemption

மூன்றில் இரண்டு பெரும்பான்மை

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்பது அரசியலமைப்பை மீறுகின்றது. அவ்வாறு அரசியலமைப்பு மீறுகின்றது என்று சொல்லியோ அல்லது வேறு காரணங்களைக் கூறியோ நீதிமன்றம் சென்றாலும் அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்றும் நீதிமன்றம் சொல்லலாம்.

அதே நேரம் சர்வஜன வாக்கெடுப்பும் தேவை என்றும் கூட நீதிமன்றம் சொல்லலாம். ஆனால், இன்றைக்கு இருக்கின்ற நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு என்ற ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் அரசாங்கம் செய்யலாம்.

ஏனெனில் ஆளுங்கட்சியுடன் எதிர்க்கட்சியில் இருக்கின்ற சில தரப்புக்களும் இணையப் போவதாக அறிகின்றோம். ஆனாலும், இந்த அரசுக்கு இப்பொழுது மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சிகளில் இருக்கின்ற பலர் இப்போது கட்சி தாவுவதற்கு இருக்கின்றனர்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தால் ஜீ.எஸ்.பி வரிச்சலுகை இல்லாமல் போகும் அச்சம்: எம்.ஏ.சுமந்திரன் | Fears Of No Gsp Tax Exemption

வரிச் சலுகை கிடைக்காமல் போகலாம் 

ஆக்கையினாலே அரசாங்கம் மூன்று இரண்டு பெரும்பான்மையை இலகுவாகவே பெற்றுக் கொள்ளலாம். ஆகையினால் அதை மட்டும் வைத்துக் கொண்டு நாம் இதனைத் தடுக்க முடியாது.

ஆகவே அரசின் இந்தப் புதிய சட்டம் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களை மீறுகிறது என்பதை நாம் தெளிவாகச் சொல்லுகின்றோம். நாம் மட்டுமல்ல இன்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து பலரும் இந்த விடயங்களைக் கூறுகின்றனர்.

இதனால் ஜீஎஸ்பி வரிச் சலுகை கிடைக்காமல் போகலாம் என்பதும் தெரிந்த விடயம். அதன் மூலம்தான் இந்த சட்ட மூலம் இயற்றுகின்ற அரசின் யோசனையை மாற்றலாம் என்று நாங்கள் நினைக்கின்றோம்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தால் ஜீ.எஸ்.பி வரிச்சலுகை இல்லாமல் போகும் அச்சம்: எம்.ஏ.சுமந்திரன் | Fears Of No Gsp Tax Exemption

கலந்துரையாடல்

அதேபோல, ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச நிறுவனங்களும் கூட இதனுடைய தாற்பரியத்தை அல்லது மோசமான தன்மையை உணர்ந்து அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். ஆகவே, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கு நாங்கள் எப்படியாக நாடு பூராகவும் எழுச்சி ஏற்படுத்தினோமோ அதேபோல் இந்த மோசமான சட்டத்தைத் தடுப்பதற்கு மக்களிடையே சென்று மக்கள் மத்தியில் விளக்கங்களைக் கொடுத்து ஒரு எழுச்சியை ஏற்படுத்த முனைகிறேன்.

இவ்வாறு நாட்டு மக்களிடத்தே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி மக்கள் எழுச்சியை எடுத்துக் காட்டுவோமாக இருந்தால் இந்த சட்ட மூலத்தை நிறைவேற்றாமல் தடுக்கலாம் என்று கருதுகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US