அநுரவை பதற வைத்த அமெரிக்க FBI உளவு பிரிவின் அதிரடி நடவடிக்கை
அமெரிக்க FBI உளவு பிரிவின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியான அறிக்கையானது இலங்கை அரசாங்கத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலின் பின்னணி குறித்த பல தகவல்களை FBI அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளதுடன், இது 71 பக்க அறிக்கையாக காணப்படுகின்றது.
இந்த சிறப்பு FBI குழுவிற்கு தலைமை தாங்கிய சிறப்பு அதிகாரியான மெர்ரிலி ஆர்.குட்வின், பயங்கரவாத குற்றங்கள் மற்றும் அமெரிக்காவிற்கு வெளியே நடத்தப்பட்ட குற்றங்கள் உட்பட கூட்டாட்சி குற்றவியல் மீறல்கள் குறித்த விசாரணைகளை நடத்தியுள்ளார்.
வெளியான குறித்த FBI அறிக்கையில், “தாக்குதலுக்கு முன்பு, ஷஹ்ரான் முகமது காசிம், முகமது காசிம் முகமது சஹ்ரான், அல்லது சஹ்ரான் ஹாஷிம் ஆகியோர் இதற்கு மூளையாக செயல்பட்டவர்கள்” என்று கூறியுள்ளது.
இவர்கள் சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தலைமையுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டதாகவும், ஐ.எஸ்.ஐ.எஸ் துணை அமைப்பாகச் செயல்பட ஒப்புதல் பெற்றதாகவும் சஹ்ரான் தொடர்பில் FBI வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
இது இவ்வாறிருக்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அண்மையில் பிள்ளையான் கைது செய்யப்பட்டதோடு, விசாரணைகள் மூலம் பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இவை அனைத்தும் குறித்த சிலசாராரோடு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டு விடுமோ என்ற சந்தேகம் இருப்பது போலத்தான் அமெரிக்காவினுடைய அறிக்கை வெளியாகி இருக்கின்றது.
குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஒரு குழப்பம் இருப்பதாக சர்வதேசம் கருதுகின்றது.
விசாரணை முழுமையாக இடம்பெற்றிருந்தால் கருதினால் மல்கம் ரஞ்சித், கோட்டாபய ராஜபக்ச உட்பட பல புலனாய்வாளர்கள், இராணுவ அதிகாரிகள் பேசப்பட வேண்டியவர்களாக உள்ளனர்.
இந்த FBI அறிக்கையானது முன்னோட்டமாக நகரப் போகின்றதா இல்லை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையை வெளியிட்டு இலங்கையை அமெரிக்கா நிலைகுலையச் செய்யப் போகின்றதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

2 முறை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி.. முதலில் ஐபிஎஸ் ஆகி பின்னர் ஐஏஎஸ் அதிகாரியான நபர் யார்? News Lankasri

தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri

முதன்முறையாக தனது மகளின் முகத்தை காட்டி போட்டோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. செம ஸ்டில்ஸ் Cineulagam
