11 வயது சிறுமிக்கு தந்தையால் நேர்ந்த கதி
தனது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தையை மதுரங்குளிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் மதுரங்குளிய, முக்குதொடுவாவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
தனது மகள் தனது கணவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தாயார் பொலிஸில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
பாலியல் ரீதியாக துன்புறுத்தல்
நேற்று முன்தினம் மதியம் அவரது மனைவி பூக்கள் பறிக்க சென்றிருந்தபோது, வீட்டிற்குள் வைத்து சந்தேக நபர் மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் தனது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சந்தேக நபர் புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.