குடிபோதையில் வாகனம் செலுத்திய சாரதியால் ஐந்து பிள்ளைகளின் தந்தை பலி!
அதுகிரிய பகுதியின் ஒருவல சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குடிபோதையில் பிழையான பக்கத்தில் வண்டியை செலுத்திய நிலையில், முன்னாள் வந்த லொரியுடன் மோதுவதை தடுக்க முயன்ற போதே சாலையோரம் சென்ற நபர் மீது மோதி இவ்வாறு விபத்து நேர்ந்துள்ளது.
குறித்த சம்பவம் அருகில் இருந்த சி.சி.டிவி யில் பதிவாகியிருந்தது. இந்நிலையில், விபத்து ஏற்பட்டவுடன் விபத்தை ஏற்படுத்திய சாரதியே விபத்துக்குள்ளான நபரை ஒருவல வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
சம்பவத்தில் பலியானவர் 49 வயதான ஐந்து குழந்தைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், விபத்தை ஏற்படுத்திய சாரதி மது போதையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam