கொழும்பின் புறநகரில் நடந்த பாச போராட்டம் - தந்தை மரணம்
கொழும்பின் புறநகர் பகுதியான மட்டக்குளியில் தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கதிரனவத்த பிரதேசத்தில் தாய்க்கும் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற 12 வயது சிறுவன் படுகாயம் அடைந்துள்ளார்.
சம்பவத்தின் பின்னர் தந்தை தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தந்தை குடிபோதையில் வந்து தாயை கடுமையாக தாக்கியுள்ளார்.
சிறுவனின் தலை
மட்டையால் தாயை தாக்கியதில் அது சிறுவனின் தலையில் தாக்கியுள்ளது.
இதனையடுத்து சிறுவன் மயங்கி விழுந்ததாகவும், பின்னர் அந்த பகுதி மக்கள் சிறுவனை தலையிட்டு மருத்துவமனையில் சேர்த்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவனின் தந்தை
சம்பவத்தையடுத்து சிறுவனின் தந்தை வீட்டுக்குள் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
