தமிழர் பகுதியில் மருமகன் தாக்கியதில் மாமனார் பலி
மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சின்னவேம்பு கிரான் பிரதேசத்தில் மருமகன் தாக்கியதில் மாமனார் உயிரிழந்துள்ளார்.
குறி்த்த சம்பவமானது இன்று (18) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் சின்னவேம்பு கிரான் பிரதேசத்தைச் சோந்த 66 வயதுடைய பொடி எட்வேட் போஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த நபரின் மகளுக்கும் மருமகனுக்கும் இடையே சம்பவதினமான இன்று பகல் வாக்குவாதத்தையடுத்து மருமகன் மகளை தாக்கியதையடுத்து அதனை கண்ட அவர் என் தாக்குகின்றீர்கள் என கேட்டுள்ளார்.
இந்தநிலையில், அவர் தலை மீது மருமகன் பொல்லால் தாக்குதல் நடாத்தியதையடுத்து அவர் படுகாயமடைந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து தாக்குதலை நடாத்தியவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்க நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியின் சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ஷோபனா.. முழு விவரம் Cineulagam
