வீடொன்றுக்குள் நடந்த பயங்கரம் - தந்தையும் மகனும் கொடூரமாக வெட்டிக்கொலை
அனுராதபுரம், நொச்சியாகம பிரதேசத்தில் வீடொன்றுக்குள் தந்தையும் மகனும் வெட்டிக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் நொச்சியாகம பகுதியில் வசிக்கும் தந்தை மற்றும் மகன் என தெரிவிக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்ட தந்தைக்கு 59 வயது, மகனுக்கு 26 வயது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கைது
இன்று அதிகாலை நடந்த இந்த கொலைகள் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பழிவாங்கல் நடவடிக்கை
2022 ஆம் ஆண்டு சந்தேக நபர்களின் தந்தையின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக அதிகாலையில் தந்தையும் மகனும் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும் ராஜாங்கனை பொலிஸ் குற்றப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 21 மணி நேரம் முன்
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam