கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும் மகனும் பலி
தென்னிலங்கையில் சம்பவித்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
அக்மீமன பொலிஸ் பிரிவின் பனகமுவ பகுதியில் வாகன விபத்து நேற்று சம்பவித்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னடுவ அதிவேக நெடுஞ்சாலை வெளியேறும் இடத்திலிருந்து காலி நோக்கிச் சென்ற கார், எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
தந்தை - மகன் பலி
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் சென்ற இருவர் காயமடைந்து கராபிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் வலஹந்துவ பகுதியைச் சேர்ந்த 36 மற்றும் 16 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் என்பது தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.