மயிலத்தமடுவில் உயிர்ப்பலிகள் ஏற்படக்கூடும்: பண்ணையாளர்கள் விசனம்
மயிலத்தமடு,மாதவனை பகுதியில் பெரும்பான்மையின அத்துமீறிய குடியேற்றவாசிகளினால் பல்வேறு அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்டுவருவதாகவும் எதிர்காலத்தில் அங்கு உயிர்ப்பலிகள் ஏற்படுவதற்கான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகவும் மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டமானது 47வது நாளாகவும் இன்றும் நடைபெற்றுவருகின்றது.
சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தமது மேய்ச்சல் தரை காணிகளில் தொடர்ச்சியான அத்துமீறல்கள் முன்னெடுக்கப்படும் நிலைமையே காணப்படுவதாகவும் ஜனாதிபதி தமக்கு வழங்கி உறுதிமொழிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லையெனவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
அத்துமீறிய குடியேற்ற செயற்பாட்டாளர்கள்
தமது மேய்ச்சல் தரைப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில் இதுவரையில் நடவடிக்கையெடுக்காத பொலிஸார் தமது கோரிக்கையினை வலியுறுத்தி முன்னெடுத்த போராட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

மயிலத்தமடு,மாதவனை பகுதியில் பெரும்பான்மையின அத்துமீறிய குடியேற்ற செயற்பாட்டாளர்கள் அப்பகுதியில் பல்வேறு அட்டூழியங்களை செய்துவருவதாகவம் வாய்பேசமுடியாத கால்நடைகளை கொடுமைப்படுத்திவருவதாகவும் பண்ணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதுவரையில் அத்துமீறிய குடியேற்ற செயற்பாட்டாளர்களுக்கு எதிராக எந்த
நடவடிக்கையும் முன்னெடுக்காத நிலையில் தாம் வாழ்வாதாரத்தினை இழந்துள்ளதாகவும்
பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.








சட்டை கசங்காமல் 500 கோடி வசூல் செய்ய ரஜினியால் மட்டுமே முடியும் - அல்லு அர்ஜுன் பதிவு படுவைரல்! Manithan
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
வெளிநாட்டில் இருக்கேன், சொல்லாம போறீங்களே அப்பா.. செஃப் தாமு மறைவால் கண்ணீர் விட்டு கதறும் புகழ் Cineulagam
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri