கிளிநொச்சி இரணைமடு குளம் பகுதியில் சிறுபோக பயிர்செய்கை திட்டம்
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் முழுமையான சிறுபோக மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி இரணைமடு குளத்தின் முழுமையான சிறுபோக மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரணைமடுக் குளத்தின் சிறுபோக பயிர் செய்கை கூட்டம் இன்று(05.03.2026) மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் கிளிநொச்சி கனகாம்பிகை அம்பாள் ஆலய முன்றலில் நடைபெற்ற போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சிறுபோக செய்கை முன்னெடுக்க தீர்மானம்
இதன்போது, இரணைமடு குளத்தின் கீழான நிலப்பரப்பில் முழுமையாக பயிர்செய்கை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், சிறுபோக செய்கைக்கு தேவையான உரம் உள்ளிட்ட விவசாய உள்ளீடுகளை கமநல சேவை நிலையங்கள் கையிருப்பு வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த கலந்துரையாடலில், நீர்ப்பாசன பொறியியலாளர், கரைச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர்கள், துறை சார்ந்த திணைகளங்களின் தலைவர்கள் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam