யானைகளின் தொல்லை அதிகரித்து வருவதாக விவசாயிகள் கவலை(Photos)
முள்ளிப்பொத்தானை பிரதேச சபைக்குட்பட்ட பாலம் போட்டாறு மற்றும் பத்தினி புரம் பகுதியில் யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பயிர் செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இரவு வேளைகளில் யானைகள் புகுந்து பெறுமதியான பயிர்களை அழித்து விட்டு செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய யானைகள் நேற்றிரவும் (03.02.2023)தென்னம் தோட்டத்தினுள் புகுந்து தென்னை மற்றும் மா மரங்களை அழித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களின் கருத்து
இது தொடர்பில் மக்கள் மேலும் கூறுகையில்,அரசாங்கத்தினால் பயிர்கள் தந்தாலும் யானை வேலியை தர மறுக்கின்றார்கள் நாங்கள் அன்றாடம் கஷ்ட்டப்பட்டு செய்கின்ற பயிர்களைக் கூட பாதுகாக்க முடியாமல் உள்ளது.
இப்பகுதியில் தினமும் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் யானை வேலி அமைத்து தருமாறு பல தடவைகள் முறையிட்டும் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை.
எனவே இப்பகுதி எமது நலன் கருதி விரைவில் யானை வேலிகளை அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்”என தெரிவித்துள்ளனர்.





அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

சவால் விட்ட ஜனனி, ஆனால் காத்திருந்த பெரிய அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
