விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்..!
உர மானியம் வழங்குவதற்கான சுற்றறிக்கை அடுத்த சில நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று விவசாய சேவைகள் ஆணையாளர் நாயகம் யூ. பி. ரோஹன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுற்றறிக்கை
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
சிறு போகத்திற்கான உர மானியத்தை விவசாயிகளுக்கு வழங்குவது, பெரும் போகத்திற்கு சமமாகவே வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு ஹெக்டேருக்கு ரூ. 5,000 வீதம் முதல் கட்டத்தில் ரூ. 15,000 மற்றும் இரண்டாவது கட்டத்தில் ரூ. 10,000 வழங்கப்படும். அதிகபட்சமாக 2 ஹெக்டேயருக்கு மட்டுமே வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை அதற்கான சுற்றறிக்கையை நாங்கள் வெளியிடவில்லை. அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் அது நடைபெறும் என நினைக்கிறேன்.
மேலும், விவசாயிகளுக்கு மற்ற பயிர்களுக்காகவும் ஒரு ஹெக்டேருக்கு ரூ. 15,000 வழங்க திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
உர மானியம்
சிறு போகத்திற்காக உர மானியம் வழங்குவதற்கான அடிப்படை நடவடிக்கைகள் கூட அரசாங்கத்தால் இன்னும் முன்னெடுக்கப்படவில்லை என தேசிய விவசாயிகள் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவிக்கையில், விவசாயிகள் தங்கள் பயிர்ச்செய்கை பணிகளை ஆரம்பித்திருந்தாலும், இதுவரை சிறு போகத்திற்கான உர மானியத்தை வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரை எந்தவொரு திட்டத்தையும் தயாரிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விவசாய சேவைகள் ஆணையாளர் நாயகம் யூ. பி. ரோஹன ராஜபக்சவிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்ததமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 3 நாட்கள் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam
