சீரற்ற காலநிலை காரணமாக விவசாயிகள் பாதிப்பு (Photos)
மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் தொடர்சியாக மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்ற நிலையில், நெல் விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழை காரணமாக அறுவடைக்கு தயாரான நிலையில் காணப்பட்ட நெற்செய்கைகள் சரிந்துள்ளதுடன், வயல் நிலங்களுக்குள் நீரும் அதிகளவு தேங்கியுள்ளது.
அதேநேரம், அறுவடையின் பின்னர் வீதிகளில் உலர விடப்பட்டிருந்த பல தொன் நெல் முற்றுமுழுதாக மழையில் நனைந்துள்ளது.
அடிமாட்டு விலைக்கு நெல் கொள்வனவு
பசளை, உரம், ஏரிபொருள் என அனைத்து விலைகளும் அதிகரித்து வரும் நிலையில், விவசாய செய்கையை மேற்கொண்ட விவசாயிகளிடம் நெல் மிகவும் அடிமாட்டு விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக மன்னார், கிளிநொச்சி மாவட்ட ஏழை விவசாயிகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.




திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
