கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகள் கையொப்பம் பெறப்படவில்லை! அதிகாரிகள் விளக்கம்
கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து எந்தவிதமான கையொப்பங்களையும் பெறுவதை தொடர்புடைய அதிகாரிகள் அறிவுறுத்தவில்லை என்று மாவட்ட அரச அதிபர் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதிஅணையாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - இரணைமடுக்குள் பகுதிக்கு உட்பட்ட விவசாயிகள் மற்றும் குளத்துக்கு அப்பாற்பட்ட மானாவாரி பயிர் மேற்கொள்ளும் விவசாயிகளிடமிருந்து, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆலோசனையின் அடிப்படையில் மட்டுமே கையொப்பங்கள் பெறப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அரசியல் நோக்கம்
எனினும், நேற்று (13.03.2026) முதல் கோரக்கன் கட்டு, சின்னக்காடு, பன்னங்கண்டி பகுதிகளில் சில குறிப்பிட்ட அமைப்புகள் விவசாயிகளை வெற்று படிவங்களில் கையொப்பமிடச் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த படிவங்கள் அதிகாரபூர்வக் கையொப்பம் இல்லாமல், குறிப்பிட்ட அரசியல் நோக்கங்களுக்காக பெற்று வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அரச அதிபர் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதிஅணையாளர், அத்தகைய அறிவுறுத்தல்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும், விவசாயிகள் நேரடியாக முறையினை தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
உச்சக்கட்ட போர் பதற்றத்தில் மத்திய கிழக்கு! 24 மணி நேரத்தில் குறிவைக்கப்பட்ட ஈரானின் முக்கிய இலக்குகள்
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan