வாழைச்சேனையில் கமநல திணைக்களத்திற்கு முன்பாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் (video)
மட்டக்களப்பு - வாழைச்சேனை கமநல திணைக்களத்திற்குட்பட்ட வாகனேரி மதுரங்கேணி சாப்பமடு கலநல அமைப்பு விவசாயிகள் வாழைச்சேனை கமநல திணைக்களத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்கள் மூதாதையர் தொட்டு இன்று வரை வேளாண்மை பயிர் செய்கையில் ஈடுபட்டு வருவதாகவும், இன்றும் சிறுபோக விவசாய செய்கையில் ஈடுபடுவதாகவும் குறித்த விவசாய காணிகளை தனியார் நிறுவனம் ஒன்றினால் சோளார் (solar) செய்கைக்காக 352 ஏக்கர் விவசாய நிலத்தினை கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
போராட்டத்தின்போது விவசாயிகள் 'எங்கள் வயல் காணிகளை அபகரிக்காதே, விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர், பல ஆண்டுகள் செய்து வந்த காணிகள் எங்களுக்கே உரியது, சோளர் பவர் எமக்கு வேண்டாம்' போன்ற வாசகங்களை எழுதிய அட்டையை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாற்று நிலங்கள் தேவையில்லை
மேலும் கருத்து தெரிவித்த விவசாயிகள், இது எங்கள் நிலம் எங்களுக்கு சோளார் மின்சாரம் வேண்டாம் என்றும், எங்கள் நிலத்திற்கு பதிலாக எமக்கு மாற்று நிலங்கள் தேவை இல்லை என்றும் கூறியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் கே.ஜெகநாத்திடம் மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன் போது கருத்து தெரிவித்த ஆணையாளர்,
இவ்விடயம் தனக்கு தெரியாது என்றும் இது தொடர்பில் எந்த நிறுவனங்களும் வந்து தன்னை சந்திக்கவில்லை என்றும் ஆராய்ந்து பார்த்து எங்களுடைய பதிவுக்குட்பட்ட எத்தனை விவசாயிகளுக்கு காணி உள்ளது என்பதை எங்களுடைய ஆணையாளர் நாயகத்துக்கு தகவலை தெரியப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
ஆணையாளரின் கருத்தினை கேட்ட விவசாயிகள் அவ் விடத்தினை விட்டு கலைந்து சென்றுள்ளனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
