மட்டக்களப்பில் விவசாயிகள் வீதியை மறித்து போராட்டம்! (VIDEO)
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஈரளக்குளம் விவசாயிகள் சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
சட்டவிரோத மண் அகழ்வு காரணமாக தங்களது வீதிகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு மண் வளம் சூறையாடப்படுவதை கண்டித்து இன்று காலை வீதியை மறித்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டத்தில் அபிவிருத்திக் குழுத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டோரால் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த கனரக வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதுடன், மண்ணை ஏற்றிச்சென்ற கனரக வாகனங்களை மறித்து அனைத்து மண்ணையும் ஏற்றிய இடத்திலே கீழ் இறக்கப்பட்டது.
இதேவேளை சம்பவ இடத்திற்கு வருகை தந்த மண்ணுரிம உரிமையாளர் குறித்த வீதியினை தனது செலவில் செப்பனிட்டு தருவதாகவும் இன்றிலிருந்து மண்ணை வெளிமாவட்டத்துக்கு அனுப்புவதற்கு அனுமதி அளிக்கப்படாது என உறுதியளித்ததை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.



சக்தி கிடைக்காத துயரத்தில் ஜனனிக்கு ஏற்பட்ட சோகம், அறிவுக்கரசியின் ஆட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவின் இலையுதிர்கால பட்ஜெட் 2025 - ரேச்சல் ரீவ்ஸ் அறிவித்த புதிய வரி திட்டங்கள் News Lankasri