மூன்றாவது நாளாகவும் போராட்டத்தில் குதித்த முத்து நகர் விவசாயிகள்
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்றைய தினமும் (18) 3வது நாளாக பொலிஸாரின் இடையூறுக்கு மத்தியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாகத் திருப்பிக் கொடு! இந்தியக் கம்பனிகளின் நில மற்றும் வளச் சூறையாடலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்குவோம்! போன்ற பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
நேற்றைய தினம் (19) திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம் பெற்றது, இந்த நிலையில் மாவட்ட செயலகம் முன்பாகவே குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த, திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரொஸான் அக்மீமன, போராட்டக்காரர்களில், 15 பேரை அவரது, கச்சேரி அலுவலகத்திற்குள் வரவழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.
சுமார் ஒரு மணி நேரமாக இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், அதில் கலந்து கொண்ட, விவசாயி ஒருவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். நாங்கள் கடந்த மூன்று தினங்களாக தொடர்ச்சியாக, கச்சேரிக்கு முன்னாள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
இந்த சந்தர்ப்பத்தில் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக ஐந்து விவசாயிகள் அலுவலகத்துக்குள் வருமாறு அழைக்கப்பட்டிருந்தோம்.

2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்! உலகின் அதிபதியாக உருவெடுக்க போகும் முக்கிய நபர்
ஆர்ப்பாட்டம்
இதன் போது, இலங்கை துறைமுக அதிகார சபையின் கம்பெனிக்கு 100 ஏக்கர் காணி வழங்கப்பட்டிருப்பதாகவும், அதைத் தவிர ஏனைய காணிகளில் நீங்கள் விவசாயம் செய்ய முடியும் எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், நாங்கள் அவ்வாறு வேறு இடங்களுக்கு சென்றால், பொலிஸாரைக் கொண்டு அவர்கள் எங்களை விரட்டுவதாக கூறினோம். இப்படி போய் விவசாய வேலைகளில் ஈடுபட்ட, ஐந்து பேரை கைது செய்து ஏழு நாட்களாக பொலிஸில் வைத்திருக்கிறார்கள் எனவும் சொன்னோம்.
இதைக் கேட்ட அவர்கள் அது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். மேலும், நூறு ஏக்கரும் நீதிமன்றத்தின் மூலம் வழங்கப்பட்டிருப்பதனால் அது குறித்து எங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும், அவர்கள் கூறியதாக தெரிவித்தார்.
பொலிஸார் போராட்ட காரர்களின் இடத்தை அகற்ற முற்பட்ட போதும் கூட அகற்றப்படவில்லை.சூரிய மின் சக்திக்கு வழங்கப்பட்ட விவசாய காணிகளை மீள பெற்றுத் தரக் கோரியே இந்த போராட்டம் நீண்ட காலமாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.









