அபகரித்த முத்து நகர் விவசாய காணியை பெற போராடும் விவசாயிகள்: தீர்வுக்காய் தினமும் ஏங்கும் நிலை
வடகிழக்கில் மக்களின் தனியார் காணிகளை நில அபகரிப்பு செய்வது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
அதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தின் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள முத்து நகர் விவசாயிகளின் விவசாய காணி இலங்கை துறை முக அதிகார சபையால் கையகப்படுத்தப்பட்டு இந்திய நிறுவனம் ஒன்றுக்கு நீண்ட கால குத்தகைக்காக சோலர் பவர் திட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இப் பகுதியில் சுமார் 800 ஏக்கர் விவசாய செய்கை பண்ணக்கூடிய காணியை அபகரித்துள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 1972ஆம் ஆண்டுக்கு முன்னர் அப்பகுதியில் உள்ள மக்கள் விவசாய மேட்டு நிலப் பயிர்ச் செய்கைகளுக்காக பயன்படுத்தி வந்தனர்.
விவசாய செய்கை
குறித்த விவசாய பகுதியில் 53 வருடங்களாக தங்களது ஜீவனோபாய தொழிலாக நெற் செய்கை நிலங்களாக அங்குள்ள மூன்று குளங்களை நம்பி விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இங்கு முத்து நகர் கமக்காரர் அமைப்பு, தகரவெட்டுவான் ,மத்தியவெளி என மூன்று கமக்கார அமைப்புக்கள் காணப்படுகின்றது அண்ணளவாக 45 ஏக்கர் அளவில் சிறுபோக பெரும்போக அறுவடை கூட இடம் பெற்றுள்ளது.
இருந்த போதிலும் 2022இல் வாரிசௌபாக்கிய திட்டத்தின் கீழ் தகரவெட்டுவான் குள புனர் நிர்மாணத்துக்காக ஒரு கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இதனை துறை முக அதிகார சபையினர் தடுத்து நிறுத்தினர் . 1984இல் துறை முக அதிகார சபைக்கு சொந்தமான காணியாக லலித் அதுலத் முதலியால் வர்த்தமாணி அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சுமார் 352 விவசாய குடும்பங்களும் இதன் மூலமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் குறித்து அப்பகுதியின் விவசாய சம்மேளனத் தலைவியான சஹீலா தெரிவிக்கையில் " துறை முக அதிகார சபையின் காணி என்று கூறி எங்களை வெளியேற்றி இந்திய நிறுவனத்துக்காக சோளர் திட்டத்துக்காக வழங்கியுள்ளனர்.இதனால் பெரும் பாதிப்படைந்துள்ளோம். போராடினால் எங்களை கைது செய்வோம் என பொலிஸார் அச்சுறுத்தினர்.
ஏற்கனவே விவசாய சம்மேளனங்களின் மூவரை கைது செய்துள்ளனர். தற்போதைய அரசாங்கமும் எங்களை ஏமாற்றியுள்ளதுடன் அன்றாட தொழிலாக இதனை நம்பியே வாழ்ந்து வருகின்றோம். விவசாயத்தை தவிர எங்களுக்கு வேறு தொழில் எதுவும் தெரியாது 1984 க்கு முன்னர் துறை முக அதிகார சபையினர் என்ன செய்தனர் இப்போது அதானி நிறுவனத்தின் கிளை நிறுவனத்துக்கு எங்கள் காணிகளை பறித்து வழங்கியுள்ளனர்.
அப்போதைய வர்த்தமானியானது அமைச்சரவையின் அங்கீகாரமில்லாமல் லலித் அதுலத் முதலி சுய விருப்பில் வர்த்தமானி அறிவித்தலை செய்துள்ளார். எங்கள் விவசாய பூமியை மீட்க பல முறை போராட்டங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து மனு வழங்கிய போதும் அவர்களும் இலங்கை துறை முக அதிகார சபையினரும் இணைந்து கூறியதாவது வேறு எந்த கம்பனிகளுக்கும் வழங்க மாட்டோம் முன்னைய அரசாங்கம் தான் கம்பனிகளுக்கு வழங்கியிருந்தது என்று கூறி விட்டு இப்போதைய ஆட்சியாளர்களால் தாரை வார்த்து விட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வழங்கியுள்ளனர்.
காணி அபகரிப்பு
இப்போது மிகவும் தீவிரமாக விவசாய காணிகளை இயந்திரம் மூலமாக அழித்து தள்ளி நாசமாக்கி பணியில் ஈடுபட்டுள்ளனர். எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்" எனவும் தெரிவித்தார்.
இது விடயமாக சாதகமான தீர்வொன்றை பெற்று தருவது தொடர்பாக காணி அபகரிப்புக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர, ரொசான் அக்மீமன போன்றவர்கள் விஜயம் மேற்கொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி விட்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து ஓரிரு வாரங்களின் பின்னர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை துறை முக அதிகார சபையினர் நுழைந்து காணி அளவீடுகளை மேற்கொண்ட நிலையில் தனியார் கம்பனிக்கு சோலர் பவர் திட்டத்துக்காக வழங்கியுள்ளனர். இது குறித்து அண்மையில் மக்கள் போராட்ட முண்ணியின் உயர் பீட உறுப்பினர் வசந்த முதலிகே அங்கு சென்று மக்களுக்கு சாதகமான பதிலை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் அவர்களது விவசாய பூமி வழங்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.
"காட்டுப் பகுதி இங்கு எவ்வளவோ காணப்படுகிறது.அதனை பெறுங்கள் விவசாய காணிகளை தாருங்கள் ரணில் அரசாங்கம் மூலமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை ஆராய்ந்து ஒப்பந்தம் செய்து விற்பனை செய்துள்ளனர். இதற்கான அனுமதியினை பிரதேச செயலகம், பிரதேச சபை வழங்கியுள்ளது.எனவே அபகரிப்பை நிறுத்தி எங்கள் விவசாய பூமிகளை தாருங்கள் என விவசாயியான வயோதிபர் ஒருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கிண்ணியா விஜயத்தின் போது அங்கு சென்று மனுவை வழங்க முற்பட்ட போதும் பாரிய பாதுகாப்புடன் வீதி மறியல் வைத்து தடுத்தனர் பின்னர் அங்குள்ள அமைப்பாளர் ராபிக் இடம் வழங்கினோம். அவர் அனுப்பினாரோ என்ன செய்தாரோ தெரியவில்லை.தீர்வில்லாமல் தற்போது தத்தளிக்கிறோம் இவ்வாறான நிலையில் கடந்த அரசாங்கத்தில் எதிர்க்கட்சியில் இருக்கும் போது இந்திய திட்டத்துக்காகவும் சம்பூர் அனல் மின் திட்டத்துக்காக போராடியவர்களே இப்போது எமது மாவட்டத்தில் ஆளுங் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்,பிரதியமைச்சராக உள்ளனர் இவர்கள் தங்களை ஏமாற்றியுள்ளதாகவும் தகரவெட்டுவான் விவசாய சம்மேளனத் தலைவர் தெரிவித்துள்ளார்.
அநுர அரசாங்கம்
முஸ்லீம்களின் காணிகளை இவ்வாறு குறி வைத்து அபகரித்து கொடுப்பது அநுர அரசாங்கம் மீது சந்தேகம் எழுகின்றது. இனவாதம், மதவாதம் இல்லை என்று பேசிய ஜனாதிபதி எங்கே இப்பகுதியை அண்மித்த அம்மன் குள விவசாயிகளுக்காக பசளை உறுதியை வைத்து வழங்கப்படுவதாக அப்பகுதி கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலாளரும் கூறுகின்ற போது எங்களை மாத்திரம் புறக்கணிப்பது ஏன்.
2025.06.27இல் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதும் தீர்த்து வைப்பது தொடர்பாகவும் பேசவில்லை. இதனை ஆராய்வதாகவும் கடந்த கால அரசாங்கம் குத்தகைக்கு வழங்கி இருக்கிறார்களா என காணி ஆணையாளரிடத்தில் விசாரிப்பதாக பிரதியமைச்சர் அருண் ஹேம சந்திர கூறினார் என விவசாயி ஒருவர் மேலும் தெரிவித்தார்.
கடவானை அட்டவானை கோமரங்கடவெல பகுதியில் உள்ள காணிகள் விவசாய பூமிகள் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் விடுவிக்கின்றனர். எனவே ஜனாதிபதி நிறைவேற்றதிகாரம் கொண்டவராக முப்படைகளின் தளபதியாக உள்ளபோதும் முஸ்லீம் சமூகம் என்ற வகையில் தான் பழி வாங்கப்படுகின்றோமா தீர்வு இல்லா விட்டால் பாரிய போராட்டமொன்றை மீண்டும் முன்னெடுப்போம் எனவும் விவசாய அமைப்பின் பிரதிநிதி மேலும் தெரிவித்தார்.
எனவே அபகரிப்பு செய்த காணிகளை மக்களின் வாழ்வாதாரம் கருதி உரியவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் அநுர அரசாங்கம் இதில் கரிசனை காட்ட வேண்டும் .கடந்த காலங்களில் எதிர் கட்சியில் இருந்த போது ஆளும் அரசாங்கத்தை கடுமையாக சாடி விமர்சித்தனர். நாடாளுமன்றத்தின் உள்ளும் வெளியிலும் போராட்டங்கள் மூலமாகவும் இந்தியாவுக்கு விற்காதே என பல கோசங்களை திருகோணமலையில் உள்ள சம்பூர் அனல் மின் நிலையம், எண்ணெய் தாங்கி தொடர்பிலும் இன்னும் பல திட்டங்களுக்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
ஆனால் தற்போது ஆட்சி பீடம் ஏறி ஆட்சியை கைப்பற்றியதும் இங்குள்ள ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனித்து விட்டனர். மக்களை ஏமாற்றியும் தலைமறைவாகிய நிலையிலும் உள்ளார்கள் எனவே முத்து நகர் விவசாய பூமியை உரியவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் H. A. Roshan அவரால் எழுதப்பட்டு, 13 July, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

செம்மணி அணையா விளக்கு போராட்டம் சொல்லும் செய்தி என்ன..! 18 மணி நேரம் முன்

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
