வெள்ளத்தில் அள்ளுண்டு காணாமல் போயுள்ள விவசாயி: தேடுதல் பணி தீவிரம்(Photos)
அம்பாறை - ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பட்டிமேடு வடக்கு வயல் பகுதியான பள்ளப்பாமாங்கை துரிசில் ஏற்பட்ட வெள்ள நீரில் தவறி வீழ்ந்து விவசாயி ஒருவர் காணாமல் போயுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் கோளாவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புளியம்பத்தை கிராமத்தைச் சேர்ந்த 56 வயதுடைய கணபதி கிருபைராஜன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
குறித்த நபர் பெய்துவரும் கடும் மழையில் சம்பவதினமான இன்று காலை வேளாண்மை நடவடிக்கைக்காக வயலுக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் வெள்ள நீர் வாய்க்காலில் நிரம்பி அதிகரித்ததையடுத்து அந்த வாய்க்காலின் துரிசிலிருந்த பலகையை அகற்ற முற்பட்டபோது தவறி துரிசில் கீழ் வீழ்ந்ததையடுத்து வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று அவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளைக் கோளாவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை நேற்றிலிருந்து கடும் மழை பெய்துவருவதால் அந்த வயல் பகுதி
வாய்க்கால்கள் நிரம்பி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றiமை குறிப்பிடத்தக்கது.

எல்லா உண்மையையும் சொன்ன ஜனனிக்கு ஷாக் கொடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Cineulagam