தமிழர் பகுதியில் பிரபல போதைப்பொருள் வர்த்தகர் கைது
மட்டக்களப்பு - ஓட்டமாவடி பிரதேசத்தில் வசிக்கும் பிரபல ஐஸ் போதைப்பொருள் வியாபாரி அரபா நகரில் வைத்து 16 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காகித ஆலை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய கதிரவெளி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து நேற்று (03.11.2022) இரவு மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டார்.
சூட்சுமான முறையில் போதைப்பொருள் விற்பனை
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் நீண்ட காலமாக மிகவும் சூட்சுமான முறையில் போதைப்பொருளை விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், கொழும்பிலிருந்து மொத்தமாக போதைப்பொருளைக்கொண்டு வந்து விற்பனை செய்து வந்ததுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், குறித்த நபர் போதைப்பொருளை விற்பனைக்கு கொண்டு சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்த ஒரு தொகைப்பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
பல தடவைகள் சாதுர்யமாக தப்பித்து வந்த வர்த்தகர்
இவரை பல்வேறு தடவைகளில் கைது செய்ய முயற்சித்தும் சாதுர்யமாக தப்பித்து வந்த நிலையிலேயே நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவரின் பின்னணியில் மேலும் பல பெரும் புள்ளிகள் இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணையுடன் சட்டநடவடிக்கைக்காக வாழைச்சேனை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 19 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
