சித்தி வீதத்தை உயர்வாக பேண மாணவர்களை பரீட்சை எழுத விடாது தடுத்த யாழில் உள்ள பிரபல கல்லூரி
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலரை கல்லூரி நிர்வாகம் புலமை பரிசில் பரீட்சை எழுத விடாது தடுத்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 18ஆம் திகதி நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் உள்ள குறித்த கல்லூரியில் சில மாணவர்கள் பரீட்சை எழுத விடாமல் கல்லூரி நிர்வாகத்தால் தடுக்கப்பட்டனர்.

மாணவர்கள் பரீட்சையில் தோற்றினால் பாடசாலை மட்ட சித்தி வீதத்தில் தாக்கம்
ஏற்படும் என கூறியே மாணவர்களை பரீட்சை எழுத விடவில்லை எனவும், ஒரு சில
மாணவர்களின் பெற்றோர்களிடம் , தமது பிள்ளைகளை தாமாக பரீட்சை எழுத
அனுமதிக்கவில்லை என கல்லூரி நிர்வாகம் கடிதம் எழுதி வாங்கியதாகவும் தகவல்கள்
மூலம் அறியமுடிகிறது.
சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்! Manithan
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri