இரண்டு மாதத்தில் ஏற்படப்போகிறது பஞ்சம்: கடும் எச்சரிக்கை விடுப்பு - செய்திகளின் தொகுப்பு
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நாட்டில் பஞ்சம் ஏற்படும் எனவும், அரசாங்கத்தினால் டொலர்களை வழங்க முடியாவிட்டால் மின்சாரம் மற்றும் எரிபொருளில் கூட வெட்டுக்கள் ஏற்படும் எனவும் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க(Campikka raṇavakka) தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரக் கப்பலுக்குப் பின்னால் ஒரு அரசு அதிகாரியின் உறவினர் இருக்கிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.
சீனாவிலிருந்து கரிம உரமாக இறக்குமதி செய்யப்பட்ட உரக்கப்பல் நாட்டுக்கு மிகவும் பாதகமானது என்பதை இந்நாட்டு ஆய்வுகூடங்கள் நிரூபித்திருந்த போதிலும் மீண்டும் வலுக்கட்டாயமாக அந்த உரக்கப்பலை இறக்க வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய தமிழ்வின் செய்திகளின் தொகுப்பு,



