யாழில் தவறான முடிவெடுத்து குடும்பப் பெண்ணொருவர் உயிரிழப்பு
யாழில் குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரைமாய்த்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த சம்பவமானது நேற்று (04.09.2023) யாழ்ப்பாணம் - ஓட்டுமடத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த ஜெயராசா அருள்பாலினி (வயது 34) என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரைமாய்த்துள்ளார்.
அதிகரித்த வட்டி
குறித்த பெண் அதிக வட்டிக்கு பணத்தினை பெற்றுள்ளார்.
இந்நிலையில் வட்டியானாது அதிகரித்தபடியால், வட்டிக்கு பணம் கொடுத்த தரப்பினரால் வீடு, லொறி, வாகனம், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் மிகுதி வட்டிப்பணம் செலுத்தப்படாமை தொடர்பிலும் நெருக்கடிகள் ஏற்பட்டிருந்ததாகவும் தெரியவருகிறது.
பிரேத பரிசோதனை
இவ்வாறாதொரு சந்தர்ப்பத்திலேயே குறித்த குடும்பப் பெண் தவறான முடிவினை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலமானது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |