வரணியில் மின்சாரம் தாக்கி குடும்ப பெண் பரிதாபமாக உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - தென்மராட்சி, வரணி பகுதியில் கிணற்றில் வீழ்ந்த கோழிக்குஞ்சை மீட்க முற்பட்ட குடும்ப பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வரணி பகுதியைச் சேர்ந்த தினேஷ் நேசமலர் (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஒன்பது மாதக் குழந்தை உட்பட இரு பிள்ளைகளின் தாயான இவர், நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
வரணிப் பகுதியிலுள்ள 12 அடி பாதையூடாக கூட்டுறவு நிறுவனம் ஒன்றுக்கு செல்லும் ‘3 பேஸ்’ மின்சார இணைப்பு, அப்பகுதி மக்களின் குடியிருப்புகளுக்கு மேலாக செல்கின்றது.

நேற்று, தனது வீட்டுக் கிணற்றுக்குள் விழுந்த கோழிக் குஞ்சை மீட்க, இரும்புக் கம்பி ஒன்றின் உதவியுடன் மீட்க முயன்ற போது, கிணற்றுக்கு மேலாகச் சென்ற மின் இணைப்பில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட நிலையில் அவர் கிணற்றுக்குள் விழுந்து மயக்கமடைந்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாகச் செயற்பட்ட உறவினர்கள், 10 நிமிடங்களுக்குள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஓய்வெடுக்க தாய்லாந்து சென்றுள்ள நடிகை சமந்தா... தங்கும் அறையின் ஒரு நாள் வாடகை எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam
அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களுக்கு அனுப்பிய கணவர்- பகீர் தகவல் கூறிய சீரியல் நடிகை மோனிஷா Cineulagam