அளம்பில் பகுதியில் கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்(Photo)
முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலைசெய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் நேற்று (6) இரவு இடம்பெற்றுள்ளது.
செம்மலையினை சேர்ந்த 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அளம்பில் பகுதியில் தனது தந்தையுடன் வீட்டில் வசித்து வந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் சம்பவம்

நேற்று இரவு குறித்த நபரின் வீட்டிற்கு சென்ற இருவர் அவரை அழைத்து தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதன்போது தலையில் படுகாயமடைந்த அவர் நிலத்தில் வீழ்ந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.
வீட்டில் கொலை செய்யப்பட்ட நபரும் அவருடை தந்தையுமே வசித்து வந்துள்ளார்கள்.
பொலிஸாரின் நடவடிக்கை

இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் நீதவான் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வீட்டில் வசித்த தந்தையிடம் பொலிஸார் விசாரணைகளை
நடத்தி வருகின்றனர்.
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam