யாழில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு
யாழில் தலையில் தேங்காய் விழுந்தலால் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம்(16.01.2026) உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் வடக்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தம்பிராசா ஜெயச்சந்திரன் (வயது 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 12ஆம் திகதி கொக்கத்தடி மூலம் தென்னை மரத்தில் தேங்காய் பிடுங்கியுள்ளார்.

இதன்போது தேங்காய் அவரது தலை மீது விழுந்துள்ளது. இந்நிலையில் அவர் தனது மனைவியிடம் விடயத்தை கூறியுள்ளார்.
அதன்பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார்.
இதன்போது அவர் மயக்கமுற்றுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri