யாழில் தீக்காயங்களுக்குள்ளான குடும்பஸ்தர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் வாகனப் பெற்றோல் ஆடையில் பட்டதை அறியாது புகைப்பிடித்த தொழிலாளி தீ பற்றியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
சத்தியசீலன் தர்மசீலன் என்னும் 45 வயதுடைய அளவெட்டி மேற்கு, அளவெட்டி என்னும் முகவரியுடைய 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
குறித்த நபர் அளவெட்டியில் கடந்த 25ஆம் திகதி மதுபானம் அருந்திய பின்பு மோட்டார் சைக்கிளைத் திருத்திய வேளை, அவர் அணிந்திருந்த சாரத்தில் பெற்றோல் பட்டுள்ளது.
இதை அறியாது இரவு 10 மணியளவில் அவர் பீடி பற்றியபோது சாரத்தில் நெருப்பு பட்டு தீ எரிந்துள்ளது.
உடனே தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 34 நிமிடங்கள் முன்

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri
