அம்பாந்தோட்டையில் பணத் தகராறால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்
அம்பாந்தோட்டை - வலஸ்முல்லை பிரதேசத்தில் நேற்று முன்தினம் (11.07.2026) இடம்பெற்ற மோதலில், குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வலஸ்முல்லை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
பணக் கொடுக்கல் - வாங்கல் விவகாரம்
பணக் கொடுக்கல் - வாங்கல் தொடர்பாக இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறே இந்தக் கொலைக்குக் காரணமாக அமைந்தது என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற போது, உயிரிழந்தவரும் கொலையைச் செய்தார் எனச் சந்தேகிக்கப்படும் 32 வயதுடைய அயல்வீட்டு இளைஞரும் மதுபோதையில் இருந்துள்ளனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் மேற்படி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகநபரான இளைஞர் அந்தப் பகுதியை விட்டுத் தப்பியோடியுள்ளார்.
இவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கே.பி.யைப் பாதுகாக்கும் அநுர அரசாங்கம் இராணுவ அதிகாரிகளைப் பழிவாங்குவது ஏன்..! சம்பிக்க ரணவக்க கடும் சீற்றம்
நேபாளத்தில் பெரு வெள்ளம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய 8 வயது சிறுவன்: மகனை தேடி அலைந்த தாய் News Lankasri