யாழில் விலங்கு வெடிமருந்தில் சிக்கி ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு சுண்டிக்குள பகுதியில் கட்டு துவக்கு வெடித்து நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில், நேற்று (05.01.2026) கருப்பையா பத்மநாதன் என்னும் குடும்பஸ்தரே காயமடைந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
படுகாயமடைந்த குடும்பஸ்தர்
வடமராட்சி கிழக்கு, சுண்டிக்குள பகுதியில் அமைந்துள்ள சிறு கடலில் இறால் பிடிப்பதற்காக கேவில் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சென்றுள்ளார்.
இதன்போது, அங்கு மிருகங்களை வேட்டையாடுவதற்கு பொருத்தப்பட்டிருந்த கட்டு துவக்கு எனப்படும் வெடி மருந்தில் சிக்கி காயம் அடைந்துள்ளார்.

காயமடைந்தவர் உடனடியாக பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அண்மைய காலங்களில் சட்டவிரோதமாக மிருகங்களுக்கு வைக்கப்படும் வெடி மருந்துகளில் சிக்கி பொதுமக்கள் காயமடைந்த சம்பவங்களும் சுண்டிக்குளம் பகுதியில் பதிவாகியுள்ள நிலையிலேயே, நேற்று குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
சேரன் காதலியிடம் தவறாக நடந்துகொள்ள நினைத்த ரவுடிகள்.. அதிர்ச்சியளிக்கும் அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam