நாட்டை உலுக்கிய பெரும் சோகம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி - வெளியான காரணம்
கொழும்பு - கடுவலை நகரில் மின்சார உபகரண விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நேற்று அதிகாலை (19) 6.20 மணியளவில் இரண்டு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தாய் மற்றும் தந்தை உட்பட இரண்டு சிறு குழந்தைகள் உயிரிழந்தனர்.
வெளியான காரணம்
மின்சார கசிவின் காரணமாக மின்விசிறிக்கு மின்சாரம் வழங்கும் கம்பியிலிருந்து தீ தொடங்கியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தீயிலிருந்து ஏற்பட்ட புகையாலும், மின்சாதனங்களில் தீ பிடித்தபோது வெளியான கார்பன் மோனாக்சைடு (CO) வாயுவை சுவாசித்ததாலும் மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
தீ விபத்து குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், தீ விபத்திற்கான காரணம் பகுப்பாய்வாளரின் விசாரணை அறிக்கையில் தெரியவரும் என்றும் கடுவெல பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த தீ விபத்தில் 35 வயதுடைய நாரத சந்தருவன் (35), லட்சுகி மதுஷானி (30), அவர்களது 2 வயது மற்றும் 9 வயது மகள் ஒனேலி பஹன்யா மற்றும் திலேனி ஹசான்யா ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாலபே - தலஹேன பகுதியில் வசித்த தம்பதியினர், குறித்த இரண்டு மாடி கட்டடத்தை குத்தகைக்கு எடுத்து மின்சாதன கடையை நடத்தி வந்துள்ளனர்.
இருப்பினும், அவர்கள் வழக்கமாக இரவில் தலஹேனவில் உள்ள தங்கள் வீட்டிற்குச் செல்வதாகவும், சில நாட்களில் அங்கேயே தங்குவதாகவும், அன்று இரவு அந்தக் கடையிலேயே தங்கியிருந்ததாகவும் சிலர் கூறியுள்ளனர்.
தீயணைப்பு அதிகாரியின் அறிவுறுத்தல்
தீயை அணைக்க சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை மாநகர சபை தீயணைப்புத் துறையின் தலைமை அதிகாரி என்.டி. லியனகே கூறியதாவது:
“நான் மூன்று தீயணைப்பு வாகனங்களில் 13 தீயணைப்பு வீரர்களை வழிநடத்தி தீயை அணைத்தேன். 20 நிமிடங்களுக்குள் தீ அணைக்கப்பட்டது. இரண்டாம் மாடியில் தீயில் சிக்கிய தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்களை வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மின்சார உபகரணக் கடையிலிருந்து வெளியேறி இரண்டாம் மாடிக்கு வந்த புகையை அவர்கள் சுவாசித்திருக்கலாம் என்றும், அதனால் தீயில் சிக்கியிருக்கலாம் என்றும் நாங்கள் நம்புகிறோம். இங்கு வெளியேறும் கதவு எதுவும் இல்லை,” என்று தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
நாங்கள் இங்கு வந்தபோது, இரண்டு தளங்களும் முழுவதுமாகத் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன. முழுவதும் கருப்புப் புகையால் சூழப்பட்டிருந்ததால், எங்கள் உபகரணங்களுடன் எங்களால் அதன் அருகில் கூட செல்ல முடியவில்லை. அவசர காலத்தில் தப்பிப்பதற்கு எந்த வழியும் இல்லாததால், அந்த நால்வரும் தங்கள் உயிரையே விலையாகக் கொடுக்க வேண்டியிருந்தது.
எனவே, ஒரு வணிக நிறுவனத்தையோ அல்லது வீட்டையோ கட்டினால், பாதுகாப்பான வெளியேறும் வழியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், கடுவலை பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்த எதிரிசூரிய மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆய்வாளர் இந்திகா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.




you may like this..
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam