மூன்று மாத நாய்க்குட்டியால் குடும்பஸ்தர் உயிரிழப்பு
யாழில் மூன்று மாத நாய்க்குட்டியின் நகக்கீறல் காரணமாகக் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பண்டத்தரிப்பு - தம்பித்துரை வீதியைச் சேர்ந்த காருண்யசிவம் ஆனந்தராசா (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் வீட்டில் வளர்க்கப்பட்ட மூன்று மாத காலம் நிரம்பிய நாய்க்குட்டி ஒன்று அவரை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது நகத்தினால் கீறியுள்ளது.
நகத்தினால் கீறி இரண்டு நாட்களின் பின்னர் நாய்க்குட்டி உயிரிழந்துள்ளது. அந்நிலையில் நாய்க்குட்டி நகத்தினால் கீறியதற்கு உரிய முறையில் சிகிச்சை பெறத் தவறி இருந்த குடும்பஸ்தர், நேற்றையதினம் நீர் வெறுப்பு நோய் அறிகுறிகளுடன் உடல் நலக் குறைவுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதை அடுத்து அவரை குடும்பத்தினர் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின் அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக
மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இஸ்ரேலிய குடியேற்றங்கள் மீது ஆண்டி பர்ன்ஹாமின் நடவடிக்கை: கிளர்ச்சியைத் தடுக்க முயற்சி News Lankasri