கட்டுநாயக்க விமான நிலையத்தில் 6 வயது பிள்ளையுடன் கைது செய்யப்பட்ட தம்பதி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 6 வயதுடைய பிள்ளையுடன் குடும்பம் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.
2 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதை பொருளுடன் இலங்கை வந்த இந்திய தம்பதியே இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
சுமார் 30 வயதுடைய இந்த தம்பதியினர், தங்கள் ஆறு வயது பிள்ளையுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
சொக்லேட்
அவர்கள் இன்று மதியம் தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL-403 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்கள் இரண்டு சூட்கேஸ்களில் சொக்லேட் உறைகளில் சுற்றப்பட்ட இரண்டு கிலோகிராம் போதைப்பொருட்களை கொண்டு வந்திருந்த நிலையில் அவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
