முல்லைத்தீவில் தேர்தல் சுவரொட்டியை விளம்பரப்படுத்திய குடும்பஸ்தர் உயிரிழப்பு
நாடாளுமன்ற தேர்தலுக்காக சுவரொட்டி விளம்பரப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் மின்தாக்கி மரணமடைந்த சம்பவம் முல்லைத்தீவில் பதிவாகியுள்ளது.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் முத்து விநாயகபுரம் பகுதியில் வைத்தே நேற்று(24.10.2024) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டிய போது மின் ஒழுக்கு காரணமாக மின்சாரம் தாக்கியுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணை
இதனையடுத்து குறித்த குடும்பஸ்தர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த குடும்பஸ்தரின் உடலம் தற்பொழுது முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் முத்து விநாயகபுரம் பகுதியை சேர்ந்த காசலிங்கம் தங்கதீபன் என்ற 45 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam