5000 ரூபாய் கொடுப்பனவு பெற தகுதியுடைய குடும்பங்கள் எவை? வர்த்தமானி வெளியீடு
கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு புத்தாண்டு கொடுப்பனவாக 5000 ரூபாய் வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய கடந்த முறை 5000 ரூபாய் கொடுப்பனவுக்கு தகுதி பெற்ற 10 குடும்பங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 07 குடும்பக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்த கொடுப்பனவு கிடைக்கவுள்ளதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த 7 குடும்ப வகைகளில், சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்கள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், முதியோர் கொடுப்பனவு பெறும் நபர்களை கொண்ட குடும்பங்கள், ஊனமுற்றோர் கொடுப்பனவு பெறும் நபர்களை கொண்ட குடும்பங்கள், சிறுநீரக நோய் காரணமாக கொடுப்பனவு பெறும் குடும்பங்கள், 100 வயதை பூர்த்தி செய்த கொடுப்பனவு பெறும் நபர்கள் மற்றும் முறையீடுகளை சமர்ப்பிக்க தகுதி வாய்ந்த குடும்பங்கள் 5000 ரூபா கொடுப்பனவை பெற தகுதியுள்ளவர்களாகும்.
வாக்காளர் பட்டியலில் ஒரு வீடு என்ற அடிப்படை எண்ணின் கீழ் ஒரு வீடு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அந்த வீட்டிலுள்ள பிரதான குடும்பங்களுக்கு மேலதிகமாக கூடுதலாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணை குடும்பங்கள் இருந்தால், அந்த துணை குடும்பங்களும் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
