கிளிநொச்சியில் போதைபொருள் பாவனையால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தொடர்பில் வெளியான தகவல்
கிளிநொச்சி (Kilinochchi) - முட்கொம்பன் பிரதேசத்தில் சுமார் 350இற்கு மேற்பட்ட குடும்பங்கள் போதைபொருள் பாவனைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக கிராம மட்ட அமைப்புக்களின் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
பூநகரி - முட்கொம்பன் பிரதேசத்தில் 840 வரையான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இதில் 350இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் போதைப்பொருள் பாவனைகளால் நேரடியாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள்
அதாவது, குறித்த பிரதேசத்தில் பல்வேறு அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்கள் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளன.

அந்தவகையில், பூநகரி கல்வி பண்பாட்டு மலர்ச்சி கூட்டத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டம் மூலமும் குறித்த விடயம் சுட்டி காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, குறித்த பிரதேசத்தில் உள்ள 350இற்கு மேற்பட்ட குடும்பங்கள் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டிருப்பது.
அந்த குடும்பங்கள் பொருளாதார ரீதியாகவும் நலிவுற்ற குடும்பங்களாக காணப்படுவதுடன் குடும்ப வன்முறைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri