முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் முறிந்து விழும் மரங்களால் தொடரும் வீதித்தடை
முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் பனிச்சை மரமொன்று வீதிக்கு குறுக்காக பாறி விழுந்துள்ளது.
இன்று மாலை 4 மணியளவில் குறித்த மரம் சரிந்துள்ளது.
சிறியளவில் வீசிய காற்றின் போது மரம் திடீரென அடியோடு பாறி வீதிக்கு குறுக்காக விழுந்தது என அவ்விடத்துக்கு அருகில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
பனிச்சை மரம்
நீண்ட காலமாக நிலைத்திருந்த இந்த பனிச்சை மரம் மரத்தின் அடியில் ஏற்பட்ட இறப்பு( உக்கல்) காரணமாக முறிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்னர் இதே வீதியில் சிலாவத்தை பெரிய குளத்திற்கு அருகில் இருந்த பாலை மரமொன்றும் வீதிக்கு குறுக்காக முறிந்து விழுந்திருந்தது.
வீதிப்போக்குவரத்து பொலிஸார்
வீதிப்போக்குவரத்து பொலிஸாரும் சமூக சேவையாளர்களும் இணைந்து அம்மரத்தினை வெட்டி அகற்றியுள்ளனர்.
வீதியபிவிருத்தி திணைக்களத்தின் பணியாளர்கள் இந்த வீதியிலுள்ள முறிந்து விழக் கூடிய ஆபத்துள்ள மரங்களை அவதானித்து வெட்டி அகற்றி வருகின்ற போதும் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்பட்டுவருவதை தவிர்க்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |