முல்லைத்தீவில் முறிந்து விழும் நிலையில் தொலைத்தொடர்பு கம்பங்கள்
முல்லைத்தீவு - நாயாற்றுப் பாலத்தினல் அதன் ஓரமாக உள்ள தொலைத்தொடர்பு கம்பங்கள் உடைந்துவிடும் நிலையில் காணப்படுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கம்பத்தின் அடிப்பகுதியில் கம்பத்தின் நடுவே வைக்கப்படும் இரும்புக் கம்பிகள் துருப்பிடித்து கம்பத்தின் கொங்கிறீற்றை வெடிப்புக்குள்ளாக்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கம்பங்கள் முறிந்து விழும் அபாயத்தில் இருப்பதானால் பயண அச்சத்தினை ஏற்படுத்தி விடும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நேர்த்தியான பராமரிப்பு
கடற்காற்றோடு கூடிய இடமாக நாயாற்றுப்பாலம் இருக்கின்றது .இதன் ஓரங்களில் நடப்படும் தூண்களின் நீண்டகால பயன்பாடுகள் பற்றிய சிந்தனையற்ற முறையில் இந்த தூண்கள் நடப்பட்டுள்ளன.

இதன்படி நீண்ட கால நோக்கில் நடப்படும் நீர்நிலைகளில் உள்ள சீமெந்து தூண்கள் மூன்றடி உயரத்திற்கு சுற்றுச் சீமெந்து படையாக்கலுக்குட்படுவது இயல்பான போதும் இங்கே அப்படியான ஏற்பாடுகளின் அளவு குறைவாகவே காணப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், தொலைத்தொடர்பு கம்பங்களின் உடைவானது தொலைத்தொடர்பு சேவையை பாதிப்பதோடு நட்டமடைதலையும் ஏற்படுத்தும் என ஆர்வலர்களின் கருத்து அமைந்துள்ளது.

இந்நிலையில், பொதுசேவை வழங்கும் அரசுசார் நிறுவனங்கள் நட்டமடையும் போது அந்த நட்டத்தின் விளைவை பொதுமக்களின் மீது சுமத்தி விடும் போக்கு இலங்கையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், சீரான பராமரிப்பற்ற போக்கே இத்தகைய இடர்பாடுகளுக்கு காரணம் என்பதும் நோக்கத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri