கொழும்பு நகரில் ஒட்சிசன் வாயுவின் அளவில் வீழ்ச்சி
கொழும்பு நகரில் ஒட்சிசன் வாயுவின் அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகச் சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் கொழும்பில் ஒட்சிசன் வாயுவின் அளவு குறைவடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் கொழும்பு நகரில் வளி மாசடைதலைத் தடுப்பதற்குச் சுற்றாடல் அமைச்சும் கொழும்பு மாநகரசபையும் இணைந்து கூட்டு நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் கொழும்பு மாநகரசபையின் மேயர் ரோசி சேனாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்களின் போது இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு நகரின் ஒட்சிசன் அளவினை நாள் தோறும் அளவீடு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
கொழும்பு நகரின் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்குத் தேவையான நிபுணத்துவ மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு மாநகரசபையின் மேயர் ரோசி, அமைச்சரிடம் கோரியுள்ளார்.

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri

கேம் சேஞ்சர் ஓடாதுனு முன்பே தெரியும்.. மிகப்பெரிய நஷ்டம்: ஷங்கரை தாக்கிய தயாரிப்பாளர் தில் ராஜு Cineulagam
