இலங்கையில் எரிபொருள் விலை குறையும் வாய்ப்பு
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை திடீரென சரிந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்நிலையில் இலங்கையில் எரிபொருள் விலையை குறைக்குமாறு நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் உரிமை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே கடிதம் மூலம் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 73.95 டொலராக இருந்து வந்த நிலையில், தற்போது 62.14 டொலராக சாரிந்துள்ளதென அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை நிதியமைச்சராக பசில் ராஜபக்ஷ பதவியேற்றதும் எரிபொருள் விலை குறைக்கப்படும் என பிரச்சாரம் செய்யப்பட்டது.
உலக சந்தையில் ஏற்பட்டுள்ள சாதகமான நிலையை நிதியமைச்சர் பயன்படுத்திக் கொள்வார் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
