சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி:விமான பயணிகளின் எண்ணிக்கையும் குறைவு
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
மார்ச் மாதம் தினமும் சுமார் 5 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். எனினும் ஏப்ரல் மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாக குறைந்துள்ளதை காணக் கூடியதாக உள்ளது.
இதனிடையே சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படங்களில் விமானங்களில் பயணிகள் வருவது வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே விமானங்களில் பயணம் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அந்நிய செலாவணி கையிருப்பு தட்டுப்பாடு என்பன காரணமாக நாட்டில் எரிபொருள், சமையல் எரிவாயு, அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் மின்சாரமும் துண்டிக்கப்படுகிறது.
இந்த தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகி வரும் நிலைமையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam