பேக்கரி உற்பத்தி பொருட்களின் விற்பனையில் கடும் வீழ்ச்சி
பேக்கரி பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் விற்பனையில் பாரிய சரிவு ஏற்ப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் பாண் விற்பனை 25% ஆகவும் கேக் உள்ளிட்ட பிற பேக்கரி பொருட்கள் விற்பனை 50% ஆகவும் குறைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
விற்பனை வீழ்ச்சி தொடர்பில் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,
பேக்கரி பொருட்களின் விலை உயர்வு
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் பேக்கரிகளுக்கு வழங்கப்படாமை, ஒரு கிலோ மாஜரின் விலை 1000 ரூபாவாகவும் பட்டர் கிலோ 3000 ரூபாவாகவும் உள்ளூர் முட்டை ஒன்றின் விலை 60 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தலைவர் குறிப்பிட்டார்.
உற்பத்திச் செலவு பெருமளவு அதிகரிப்பதால், பேக்கரிப் பொருட்களின் விலை உயர்வினால் விற்பனை குறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
எனவே எதிர்வரும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் அரசாங்கம் பேக்கரி பொருட்களுக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்து முட்டையின் விலையை குறைத்து நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri

2 முறை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி.. முதலில் ஐபிஎஸ் ஆகி பின்னர் ஐஏஎஸ் அதிகாரியான நபர் யார்? News Lankasri
