திருமணம் செய்வதாக இளம் பெண்ணொருவர் செய்த மோசமான செயல்
கொழும்பில் தங்கள் மகளுக்கு திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, மனைவியின் விபரங்கள் உட்பட போலி தகவல்கள் மூலம் திருமண விளம்பரத்தை செய்தித்தாளில் வெளியிட்டு, ஏமாற்றிய தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தம்பதி விளம்பரம் மூலம் நபர் ஒருவரிடமிருந்து சுமார் 3 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக குற்றத்தை ஒப்புக்கொண்ட தம்பதியினருக்கு தண்டனை வழங்குவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டது.
சந்தேகநபர்கள் தங்கள் மகளுக்கு வரனைத் தேடுவதாகக் கூறி, செய்தித்தாளில் போலி திருமண விளம்பரத்தை வெளியிட்டதாக நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்தனர்.
போலி திருமண விளம்பரம்
சந்தேகநபரான கணவர் மனைவியின் கையடக்க தொலைபேசி எண் மற்றும் பிற விபரங்களை செய்தித்தாளில் வெளியிட்டுள்ளார்.

தனது மகளுக்கு வரன் தேடுவதாகவும், கணவனும் மனைவியும் இணைந்து மோசடியைச் செய்ததாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
திருமண விளம்பரத்தை நம்பிய நபர் ஒருவர், சந்தேக நபரின் மனைவியின் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பண மோசடி
மகள் போன்று நடித்த பெண் அந்த நபருடன் தொலைபேசி ஊடாக தொலைபேசியில் நட்பை ஏற்படுத்தியுள்ளார்.

பின்னர் அந்த பெண் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
திருமணம் செய்வதற்கு முன்பு தேவையான ஏற்பாடுகளை முடிக்க பணம் தேவை என்று சந்தேக நபரின் மனைவி முறைப்பாட்டாளரிடம் தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டாளர் சந்தேக நபரின் கணக்கில் 270,000 ரூபாய் வரவு வைத்ததாகவும் விசாரணைகளின் போது தகவல் தெரியவந்ததாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.